புதிய தொலைக்காட்சி மற்றும் வானொலி அனுமதிப்பத்திரங்கள் அது தொடர்பில் நியமிக்கப்பட்ட இலத்திரனியல் ஒலிபரப்பு அதிகார சபை சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் வழங்கப்படுமென வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான சந்தர்ப்பம் உள்ளதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொலைக்காட்சி மற்றும் வானொலி உரிமங்களை வழங்குவது தொடர்பாக வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக மின்னணு ஒலிபரப்பு அதிகாரசபை சட்டம் தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 25 தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் 51 வானொலி சேனல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.