follow the truth

follow the truth

January, 22, 2025
Homeவிளையாட்டுஎல்பிஎல் போட்டிக்கு வரும் வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள்

எல்பிஎல் போட்டிக்கு வரும் வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள்

Published on

நான்காவது முறையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புள்ள வெளிநாட்டு வீரர்கள் குறித்த அறிவிப்பை எல்பிஎல் அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வெளிநாட்டு வீரர்கள் கீழே;

வெஸ்ட் இண்டீஸ் – டுவேன் பிராவோ, கைரோன் பொல்லார்ட், ஜான்சன் சார்ல்ஸ் மற்றும் ஏஷ்லி நர்ஸ்
நியூசிலாந்து – மிட்செல் சென்டர், இஷ் சோதி, டிம் சிஃப்ட், டெரில் மிட்செல் மற்றும் டக் பிரேஸ்வெல்
அயர்லாந்து – போல் ஸ்டிர்லிங்
நமீபியா – ஜெரார்ட் எரஸ்மஸ்
பங்களாதேஷ் – ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் அஃபிஃப் ஹொசைன்
பாகிஸ்தான் – முகமது நவாஸ், நசீம் ஷா மற்றும் வஹாப் ரியாஸ்
தென்னாப்பிரிக்கா – லுங்கி என்கிடி, இம்ரான் தாஹிர் மற்றும் தப்ரீஸ் ஷம்சி
ஆஸ்திரேலியா – ஷோன் மார்ஷ், மேத்யூ வேட், டார்சி ஷார்ட் மற்றும் உஸ்மான் கவாஜா

எல்பிஎல் போட்டியில் 5 அணிகள் இணைய உள்ளன.

காலி, தம்புள்ளை, யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் கண்டி ஆகிய அணிகளின் பங்குபற்றுதலுடன், கொழும்பு மற்றும் கண்டியை அண்மித்த பகுதிகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரஞ்சி தொடரில் விளையாடும் விராட் கோலி

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது பல்வேறு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள்...

லசித் மலிங்கவின் ‘𝐊𝐈𝐋𝐋𝐄𝐑’ வெளியானது

இலங்கையின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா '𝐊𝐈𝐋𝐋𝐄𝐑' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். நேற்று (20) பிற்பகல் கொழும்பில் இது...

அது வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும் – சாம்பியன்ஸ் டிராபி குறித்து ரோஹித்

எட்டு அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (பெப்ரவரி) 19ம் திகதி...