follow the truth

follow the truth

January, 19, 2025
HomeTOP1இந்த ஆண்டு O/L பரீட்சையை நடத்த வேண்டாம் என டலஸ் முன்மொழிவு

இந்த ஆண்டு O/L பரீட்சையை நடத்த வேண்டாம் என டலஸ் முன்மொழிவு

Published on

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்குமாறு சுதந்திர மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதனால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய 600,000 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடாத்துவதைப் பற்றி பரிசீலிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, அதற்குப் பதிலாக அனைத்து மாணவர்களும் உயர்தரக் கல்வியை ஆரம்பிப்பதற்கு தகுதியுடையவர்கள் என பரீட்சை திணைக்களத்தின் சான்றிதழை வழங்குமாறு அறிவுறுத்தினார்.

“எந்த மாணவருக்கும் அநீதி இழைக்கப்படாது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வைத்து எவரும் வேலைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதும் உண்மையாகும்” என அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் மாணவர்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கப்பட மாட்டாது என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

லண்டன் பாடவிதான சாதாரண தரப் பரீட்சை தொடர்பாக கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக மாணவர்களுக்கு பெரும் சலுகை கிடைத்ததாகவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தனது முன்மொழிவை பரிசீலிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன

இன்றும் (19) பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று 15 குறுகிய தூர...

கனமழை காரணமாக சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறப்பு

கனமழை காரணமாக சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தலா 6 அங்குலமாக 5 வான்கதவுகளை...

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

மண்சரிவு தொடர்பான முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு...