follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுவடக்கு கிழக்கில் ஹர்த்தால்...

வடக்கு கிழக்கில் ஹர்த்தால்…

Published on

பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்கக் கோரியும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் நாளை (25) ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.

இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள 07 தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவளித்துள்ள நிலையில், வடக்கு, கிழக்கிலுள்ள ஆயர்கள் உள்ளிட்ட மத தலைவர்களும் இதற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களை ஒடுக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதே ஹர்த்தாலின் பிரதான நோக்கமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு வடகிழக்கு போக்குவரத்து சங்க பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகளும் ஆதரவு அளிப்பார்கள் என வடகிழக்கு அரசியல் கட்சிகள் நம்பிக்கை தெரிவிக்கும் அதே வேளையில் வடகிழக்கு அரசியல் கட்சிகளும் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்கவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டனுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பதிவு செய்யப்படாத சொகுசு BMW வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்...

இனி கடவுச்சீட்டு தட்டுப்பாட்டுக்கு இடமில்லை

புதிய கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் செயற்பாடு நேற்று முதல் ஆரம்பமானது. பல மாதங்களாக நிலவிய கடவுச்சீட்டு விநியோக பிரச்சினைக்குத் தீர்வு...

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையைத் திருத்துவதற்கு நடவடிக்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலினூடாக தமது தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு அதிகாரம் கிடைக்கப்பெறுமானால், நாட்டிற்கு நன்மை ஏற்படும் வகையில்...