பிரித்தானிய கன்ஷவேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சேர் டேவிட் எமேஷ், கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை நேற்று (15) செய்யப்பட்டுள்ளார்.
இது பயங்கரவாத செயல் என நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் மத்தியில் பிரசாரத்திற்கு சென்ற வேளையில், இளைஞர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினரை கூரிய ஆயுதத்தால் குத்தியுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினரை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை, அந்த நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.