ஐக்கிய தேசியக் கட்சியின் மே பேரணியில் கட்சி சார்பற்ற ஜனாதிபதியாக பங்கேற்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
கட்சி உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து மே தினத்தை கொண்டாடுவதற்கான திட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி குழு பிரதிநிதிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.