பிரித்தானிய பிரதிப் பிரதமர் டொமினிக் ராப் இன்று (21) திடீரென தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனக்கு எதிரான துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீன விசாரணையை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இவர் நாட்டின் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
ராப் தனது முடிவு குறித்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு கடிதம் அனுப்பியுள்ளார், அதை அவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
அதில், தனக்கு எதிரான விசாரணை ஆபத்தான முன்னுதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அவர் அரசாங்கத்தை ஆதரிப்பதாக தெரிவிக்கின்றார்.