ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாளைய பொதுக்கூட்டம் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் அல்ல, பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அழைக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அவர் இதனை நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இந்த பொதுக்கூட்டம் சட்டப்பூர்வமானது அல்ல என்று வெளியிட்ட அறிவிப்புக்கு பதிலளிக்கையிலேயே தெரிவித்திருந்தார்.
கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், பேராசிரியர் ஜி.எல். பீரிஸுக்கு எழுத்து மூலம் அறிவித்தல் கடந்த 11ஆம் திகதி வழங்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இவ்வாறான பொதுச் சபைக் கூட்டத்தை நடத்துவது கட்சியின் அரசியலமைப்புக்கு எதிரானது என குறிப்பிட்டிருந்தார்.
எனவே இதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தாம் பொதுச் சபைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது, கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் அல்ல, பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தான் பொதுச் சபைக் கூட்டத்தை அழைத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
டலஸ் அழகப்பெரும, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.