Homeஉள்ளூர்யாழில் 4,000 கடலட்டைகளுடன் 17 பேர் கைது

யாழில் 4,000 கடலட்டைகளுடன் 17 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 4,255 கடலட்டைகளுடன் 17 சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (03) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தை அண்மித்த கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து  நடவடிக்கையில் ஈடுபட்ட வேளையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபரகள்  கடலுக்கு கொண்டு சென்ற நான்கு படகுகள், சுழியோடி உபகரணங்கள், பிடிக்கப்பட்ட 4ஆயிரத்து 255 கடலட்டைகள் என்பவற்றையும் கடற்படையினரால்  கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள், மணியத்தோட்டம், உதயபுரம், குருநகர் மற்றும் அரியாலை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும்  21 முதல் 56 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களையும், மீட்கப்பட்ட பொருட்களையும்  மேலதிக சட்ட நடடிக்கைக்காக யாழ்ப்பாண நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular