எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிள்ளைகளின் கல்வியை பணயக் கைதிகளாக எடுத்துக்கொள்ளமாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கல்வி அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பரீட்சை விடைகளை சரிபார்த்து ஒரு வாரத்திற்குள் இணக்கப்பாட்டுக்கு வராவிட்டால் அவசர சட்டத்தின் கீழ் கல்வியை அத்தியாவசிய சேவையாக மாற்றுவோம் என்றார்.