பதுளை தல்தெனை போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒன்பது கைதிகளும் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நேற்று (17) காலை இரண்டு கைதிகள் கைது செய்யப்பட்டதாகவும், இரவு வேளையில் நால்வர் கைது செய்யப்பட்டதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் இன்று (18) பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.