எதிர்க்கட்சியை விட்டு வெளியேறி அரசாங்கத்தில் இணைந்துகொள்ள தயாராகவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் நெருக்கடி நிலை எட்டியுள்ளது.
இதற்கு காரணம் தற்போது அமைச்சர் பதவியை வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் மீது முதலில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கட்சிகளுக்குள் பேச்சு எழுந்துள்ளது.
கடந்த வாரம் கட்சிக்குள் நடைபெற்ற கூட்டத்திலும் சர்ச்சையான சூழ்நிலை உருவானதாக அறிய முடிகிறது.
இதன்படி, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மேலும் கலந்துரையாடப்பட்டு, கட்சியின் அரசியலமைப்பை மீறும் எவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.