இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள மேலும் 10 இலட்சம் முட்டைகளை விடுவிக்க இன்று (13) அனுமதி வழங்கப்பட்டதாக அரச வர்த்தக சட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று மாலை முதல் முட்டை விநியோகம் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.