பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்தி வருவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
சலுகை நிதிய முறையின் கீழ் இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் எனவும் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது இந்த வருடத்துக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்களில் ஒன்று என ப்ளூம்பெர்கிற்கு வழங்கிய நேர்காணலில் இலங்கையில் உள்ள அதன் வதிவிடப் பணிப்பாளர் சென் சென் தெரிவித்தார்.
மேலும், இலங்கையில், வங்கி, எரிசக்தி மற்றும் கல்வித் துறைகளுக்கு உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டமிட்டுள்ளது.
மின்சாரதுறையின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு தேவையான சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணிப்பாளர் தெரிவித்தார்.