அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் சுகாதார சான்றிதழ் அறிக்கை இன்று (13) வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு மில்லியன் முட்டைகள் கொண்ட மற்றுமொரு கையிருப்பு அண்மையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதுடன், அவற்றை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி பெறப்படவிருந்தது.