follow the truth

follow the truth

November, 20, 2024
Homeஉலகம்மியன்மார் வான்வழித் தாக்குதலில் 53 பேர் பலி

மியன்மார் வான்வழித் தாக்குதலில் 53 பேர் பலி

Published on

மியன்மாரில் அந்நாட்டு அரச படையினர் இன்று நடத்திய வான் வழித் தாக்குதலில் குறைந்தபட்சம் 53 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் குறைந்தபட்சம் 15 பெண்கள் மற்றும் சிறார்களும் அடங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சாகெய்ங் பிராந்தியத்திலுள்ள கிராமமொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பிராந்தியம் மியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்து வருகிறது.

அங்குள்ள மக்கள் தமது சொந்த ஆயுதக்குழுக்களை ஸ்தாபித்துள்ளதுடன், சுயமாக பாடசாலைகள் மற்றும் மருத்துவ நிலையங்களையும் நடத்துகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை இராணுவ விமானமொன்று குண்டு வீசியதாகவும், பின்னர் ஹெலிகொப்டர் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் பாதுகாப்புப் படைகள் எனும் கிளர்ச்சிக்குழுவின் புதிய அலுவலகத் திறப்பு வைபவத்தின்போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசாவில் கால் வைத்த நெதன்யாகு – பாலஸ்தீன மக்களிடையே கடும் அதிருப்தி

இஸ்ரேல் - பாலஸ்தீன போர் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸின் தலைவர் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ள நிலையில், காசாவில் போர் பதற்றம்...

கேரளாவில் டிஜிட்டல் நீதிமன்றம் – 24 மணி நேரமும் வழக்கு தாக்கல் செய்யலாம்

கேரள மாநிலம் கொல்லத்தில் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றம் நாளை(20) முதல் செயல்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் முதல்...

“ஹிஜாப் அணிய மறுப்பது மனநோய்..” – ஈரான் அரசு

இஸ்லாமிய நாடான ஈரானில் பொது இடங்களில் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதி இருக்கிறது. இதற்கு...