follow the truth

follow the truth

November, 20, 2024
Homeஉள்நாடுஅதிக விலைக்கு முட்டை விற்பனை - இன்று திடீர் சுற்றிவளைப்பு

அதிக விலைக்கு முட்டை விற்பனை – இன்று திடீர் சுற்றிவளைப்பு

Published on

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்ததாக கூறப்படும் வடமேற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளருக்கு சொந்தமான முட்டை கடையொன்று இன்று (11) சுற்றிவளைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையின் குருநாகல் மாவட்ட அலுவலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவத்தகம, பிலஸ்ஸ, உடுமுல்ல பிரதேசத்தில் உள்ள முட்டைக் கடையை மாவத்தகம பொலிஸாரின் ஒத்துழைப்புடன் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் குழுவொன்று சோதனையிட்டுள்ளது.

குறித்த இடத்தில் 50,000க்கும் மேற்பட்ட முட்டைகள் விற்பனைக்கு தயார் செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்தமை தொடர்பில் குறித்த சங்கத்தின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலி, களுத்துறை, கேகாலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதலாம்...

தேசிய பட்டியல் உறுப்பினர் – ரணில் தலைமையில் விசாரணைக்குழு

புதிய ஜனநாயக முன்னணியின் இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு ரவி கருணாநாயக்கவை நியமித்தமை தொடர்பில் சுயாதீன...

70,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

சதொச மற்றும் அரச வர்த்தக (இதர) சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக, வர்த்தக, உணவு...