சலூன்களில் முடிவெட்டுதல், முகச்சவரம் செய்தல் ஆகியவற்றுக்காக
அறவிடப்படும் கட்டணங்கள் தற்போது அதிகரித்துள்ளன.
கொழும்பு உள்ளிட்ட ஏனைய நகரங்களிலுள்ள சலூன்களிலும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஹட்டன்- டிக்கோயா முடித்திருத்துவோர் சங்கத்தில் எடுக்கப்பட்ட
தீர்மானத்திற்கமைய முடி வெட்டுவதற்காக 300 ரூபாய், முகச்சவரம் செய்வதற்கு 200 ரூபாய், சிறுவர்களுக்கு முடி வெட்டுவதற்கு 200 ரூபாய் முடியை வெட்டி வர்ணம் பூசுவதற்கு 800 ரூபாய், மசாஜ் செய்வதற்கு 200 ரூபாய் என விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.