18 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தும் வேலைத்திட்டம் இன்று முதல் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 4 கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டமானது இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, ஹோமாகம, ஸ்ரீஜயவர்த்தனபுர, பிலியந்தல ஆகிய கல்வி வலயங்களில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.