follow the truth

follow the truth

January, 21, 2025
Homeவிளையாட்டுசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 08 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 08 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Published on

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

அது, பஞ்சாப் கிங்ஸ் அணியை 08 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நாணய சுழற்சியில் வென்று களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்களைப் பெற்றது. தனித்து ஆடிய கெப்டன் ஷிகர் தவான் 66 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்களை குவித்தார்.

இதில் 5 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடங்கும். சாம் குர்ரன் 22 ஓட்டங்களை பெற்றார். இந்த இரு வீரர்களைத் தவிர, அணியில் உள்ள வேறு எந்த வீரரையும் 5 ஓட்டங்களை கடக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் அனுமதிக்கவில்லை.

பந்துவீச்சில் மயங்க் மார்கண்டே 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 143 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 17 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 145 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

ராகுல் திரிபாதி 48 பந்துகளில் 74 ஓட்டங்களை எடுத்தார். இதில் 10 பவுண்டரிகளும் 03 சிக்ஸர்களும் அடங்கும்.
ஆட்ட நாயகன் விருதை பஞ்சாப் கிங்ஸ் கெப்டன் ஷிகர் தவான் பெற்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரஞ்சி தொடரில் விளையாடும் விராட் கோலி

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது பல்வேறு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள்...

லசித் மலிங்கவின் ‘𝐊𝐈𝐋𝐋𝐄𝐑’ வெளியானது

இலங்கையின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா '𝐊𝐈𝐋𝐋𝐄𝐑' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். நேற்று (20) பிற்பகல் கொழும்பில் இது...

அது வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும் – சாம்பியன்ஸ் டிராபி குறித்து ரோஹித்

எட்டு அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (பெப்ரவரி) 19ம் திகதி...