மட்டக்களப்பு கல்லடி-உப்போடை நொச்சிமுனையில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையிலான உறவினையும்1985 கலவர காலத்தின் போது நிகழ்ந்த முஸ்லிம்களின் வெளியேற்றத்தையும் பின்னணியாகக் கொண்ட ஆவணப்படம் ‘நொச்சிமுனை தர்ஹா – சகவாழ்வின் கடைசிக் கோட்டை’யின் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்து, இம்மாதம் பொதுமக்களுக்காகக் காண்பிக்கப்படவுள்ளது.
எழுத்தாளரும் ஊடக, சமூக செயற்பாட்டாளருமான ஆத்மா ஜாபிர் இதனை எழுதி இயக்கியுள்ளார். ஏறத்தாழ 30 நிமிட கால அளவுள்ள இவ் ஆவணத் திரைப்படம், கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அவர் முன்னெடுத்த ஆராய்ச்சி, தேடல், உழைப்பின் அறுவடையாகும்.
இவ் இலவச திரைப்படக் காட்சி குறித்த மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இவ் ஆவணப்படத்தின் first look poster, trailer ஆகியவை தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. ஆத்மா ஜாபிர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மற்றும் திரைப்படத்துறை விரிவுரையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Nochchimunai Dharga – the final fort of co-existence
Documentary film
Written and directed by
Aathmaa Jafir