தெற்கு தாய்வானில் உள்ள காஹ்சியுங் நகரில் இடம்பெற்ற தீ விபத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் 13 மாடி கட்டடமொன்றில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை இந்தத் தீ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 55 பேர், தீயணைப்பு படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் நான்கு மணிநேர போராட்டத்தின் பின்னர் தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.