follow the truth

follow the truth

November, 20, 2024
Homeஉள்நாடுமுப்பது பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆரம்பிக்க ஏற்பாடு

முப்பது பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆரம்பிக்க ஏற்பாடு

Published on

இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஆங்கிலக் கல்வியுடன் தகவல் தொழில்நுட்பக் கல்வியும் வழங்கப்பட வேண்டும் எனவும், இதனூடாக இந்நாட்டின் பிள்ளைகள் அறிவுத்தகமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்நாட்டில் நாற்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு இலவச சீருடைகள் மற்றும் இலவச மதிய உணவு வழங்கி அளவிட முடியாத பணியை ஆற்றிய மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 30 ஆவது நினைவு தினம் எதிர்வரும் மே 1 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுவதாகவும், இதனை நினைவுகூறும் விதமாக, முப்பது பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அன்னாரது 100 ஆவது பிறந்தநாள் அடுத்த வருடம் இடம் பெறுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதனை நினைவுகூறும் விதமாக மேலும் நூறு பாடசாலைகளில் இந்த பிரபஞ்சம் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

திஸ்ஸமஹாராம யடாலதிஸ்ஸ ஆரம்பப் பிரிவு பாடசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறைக்கான உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் பிரபஞ்சம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு, திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் பாடசாலை வகுப்பறைகளுக்கான டிஜிடல் திறை மற்றும் கணினி உபகரனங்களை அன்பளிப்புச் செய்யும் பிரிவின் 28 ஆவது கட்டமாக 924,000.00 ரூபா பெறுமதியான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களும் இவ்வாறு ஹம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராம யடாலதிஸ்ஸ ஆரம்பப் பிரிவு பாடசாலைக்கு இன்று(08) கையளிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிதி அமைச்சின் செயலாளராக தொடர்ந்தும் மஹிந்த சிறிவர்தன

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட கே. எம். மஹிந்த சிறிவர்தன இன்று (20)...

கொழும்பில் உள்ள மதுபானக் கடைகளில் திடீர் சோதனை

கொழும்பு பிரதேசத்தில் மதுபானம் விற்பனை செய்யும் R.B.04 உரிமம் பெற்ற பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

பஸ் கட்டணத்திற்கு பதிலாக அதிக பணம் அறவிடப்பட்டால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு...