பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்கள், சீமெந்து மற்றும் பால் மாவின் விலையை நிர்ணயம் செய்ய எதிர்காலத்தில் நுகர்வோர் அதிகாரசபை தலையிட வேண்டும் என அதன் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இதன்போது கைத்தொழில்துறையினர் தமது விலைகளை குறைக்காததே காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், எதிர்காலத்தில் ஆய்வுக்கூட பரிசோதனைகள் மற்றும் இணையம் மூலம் பொருட்களை விற்பனை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.