பொலிஸ்மா அதிபர் சி. டி. விக்கிரமரத்னவுக்கு மார்ச் 26ஆம் திகதி முதல் மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 25ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்பு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.