நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அரசியல் கோரிக்கை விடுத்தால், ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஆதரவளிக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கு கட்சி தயாராக இல்லை என்றால் தான் அரசியல் தீர்மானம் எடுக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“… இப்போது வரிசைகள் உள்ளதா? இல்லை. மின்சாரம் துண்டிக்கப்படுமா?.. இல்லை. நாமும் பார்க்கிறோம்.. நுகர்வோரும் கூறுகின்றனர்.
எனக்கு தனியாக அரசாங்கத்தில் இணைவதில் நம்பிக்கை இல்லை. முதலில் ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை வைக்க வேண்டும். அந்த கோரிக்கை கேட்கப்படாவிட்டால் குழுவாக சேர்ந்து முடிவெடுக்கலாம்…”