முட்டைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 9 நபர்களுக்கு அங்குனகொலபெலஸ்ஸ நீதிமன்றம் 9 இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை குறித்த நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வௌ்ளை முட்டை 44 ரூபாவிற்கும் சிவப்பு முட்டை 46 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென குறிப்பிட்டு அதிகார சபை அண்மையில் வர்த்தமானி அறிவித்தலை வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.