2023 ஐபிஎல் போட்டியில் காயம் அடைந்த கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக, இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான அணித் தலைவர் தசுன் ஷானகவை நியமிக்க குஜராத் டைட்டன்ஸ் அணி தீர்மானித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் வில்லியம்சனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு பேட்டிங் செய்ய முடியவில்லை. பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகி தனது நாட்டுக்கு புறப்பட்டார்.
இதுவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடாத தசுன் ஷானக தனது அடிப்படை விலையான 50 இலட்ச இந்திய ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.