ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு ஐந்து பேரடங்கிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஒன்றை சனத் ஜயசூரிய தலைமையில், விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் வீரர்களான அசன்த டி மெல், கப்பில விஜேகுணவர்தன, சரித் சேனாநாயக்க, பெர்வீஸ் மஹரூப் ஆகியோர் இக் குழுவில் இடம்பெறும் மற்றைய நான்கு உறுப்பினர்களாவர்.
இலங்கை கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான ஆலோசனைகளை விளையாட்டுத்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சு அதிகாரிகள், தேசிய விளையாட்டுத்துறை பேரவை உறுப்பினர்கள் ஆகியோருக்கு வழங்குவதே தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பிரதான பணியாக அமையவுள்ளது.