பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு 03 மாத கால சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ளதாக சபாநாயகர்மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சபாநாயகர் தலைமையில் நேற்று மதியம் சட்ட சபை கூடியது.
இது தொடர்பான ஆவணங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அனுப்பி வைக்கப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக்காலம் மார்ச் 26ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.