மின்சாரக் கட்டணம் தொடர்பில் அரசியல்வாதிகள் எடுக்கும் தீர்மானங்களின் பாதகமான விளைவுகளை இன்னும் 10 வருடங்களில் பார்க்கலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க கூறுகையில், பல சந்தர்ப்பங்களில் அரசியல்வாதிகள் முறையான முறைக்கு புறம்பாக மின்சார கட்டணம் தொடர்பில் தீர்மானங்களை எடுத்துள்ளனர்.
பல அரச நிறுவனங்கள் நஷ்டம் அடைவதற்கு அந்த நிறுவனங்களில் அரசியல் தலையீடுகளே முக்கிய காரணம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.