ஒவ்வொரு ஆண்டும் அம்பியூலன்ஸ் சேவைக்காக திறைசேரி வழங்கும் தொகை 3.2 பில்லியன் ரூபாவாகும்.
ஆனால் இந்த வருடம் திறைசேரி 2.5 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
பெறப்பட்ட பணத்தில் சம்பளம் கொடுக்க வருடாந்தம் 1.2 பில்லியன் செலவிடப்படுகிறது.
அம்பியூலன்ஸ் பழுதுபார்ப்பு, டயர்கள் மற்றும் பிற உபகரணங்களுக்காக வருடாந்தம் ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக செலவிடப்படுவதாக பணிப்பாளர் சபை தெரிவிக்கின்றது.
‘சுவசரிய’ இலவச அம்பியூலன்ஸ் சேவையானது நாடு முழுவதும் 279 அம்பியூலன்ஸ்களை இயக்குகிறது மற்றும் நாளொன்றுக்கு 1,050 க்கும் மேற்பட்ட அவசர நிகழ்வுகளுக்கு அம்பியூலன்ஸ்களை அனுப்புகிறது.
எவ்வாறாயினும், மார்ச் மாதத்திற்கான திறைசேரியால் வழங்கப்பட வேண்டிய தொகை நேற்று (29) வரைக்கும் அம்பியூலன்ஸ் சேவையின் பணிப்பாளர் சபைக்கு கிடைக்கவில்லை.
இதன் காரணமாக அம்பியூலன்ஸ் பராமரிப்புக்காக தனியார் மற்றும் தனி நபர்களின் உதவியை நாட பணிப்பாளர் சபை முடிவு செய்துள்ளது.
ஒரு அம்பியூலன்ஸ் ஒன்றின் ஆண்டு பராமரிப்பு செலவு ஐம்பது லட்சம் ரூபாய்.
பணம் கிடைக்காமை தொடர்பில் சுகாதார இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க, இந்த தீர்மானம் தொடர்பில் அமைச்சுக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த அம்பியூலன்ஸ் சேவை நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. இது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்களான ஹர்ஷ டி சில்வா மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.