19 மாதங்களுக்குப் பின் கனடா, மெக்சிகோ ஆகியவற்றுடனான எல்லையை பயணிகள் தரைவழிப் போக்குவரத்துக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் திறக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கனடா, மெக்சிகோ நாடுகளுடனான எல்லைகளை அமெரிக்கா மூடியது.
அதன்பின் இன்றியமையாப் பொருட்களைக் கொண்டுசெல்லவும், இன்றியமையாப் பணிகளுக்குச் சிறப்பு அனுமதி பெற்றுச் செல்லவும் அனுமதிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட வெளிநாட்டவர் நவம்பர் முதல் கனடா, மெக்சிகோ நில எல்லை வழியாக அமெரிக்காவுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.