follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுவறியவர்களுக்கான அன்பளிப்பாக சவூதியிடமிருந்து உலர் உணவுப் பொருட்கள்

வறியவர்களுக்கான அன்பளிப்பாக சவூதியிடமிருந்து உலர் உணவுப் பொருட்கள்

Published on

ஹிஜ்ரி 1444 ஆம் ஆண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு வறியவர்களுக்கான அன்பளிப்பாக சவூதி அரேபிய இராஜ்யத்தின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களால் வழங்கப்படும் உலர் உணவுப் பொதிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வானது, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் கௌரவ காலித் அல் கஹ்தானி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இசட்.ஏ.எம்.பைசல் அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த திட்டமானது சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார, தஃவா மற்றும் வழிகாட்டல் அமைச்சின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த உணவுப் பொதிகளானது இலங்கையில் உள்ள பள்ளிவாயில்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களின் ஊடாக தகுதியான மக்களுக்கு விநியோகிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொதுத் தேர்தல் – 290 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 290 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது, தேர்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பிலேயே...

இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய குழு

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத்...

வாகன வருமான அனுமதிப் பத்திரம் குறித்து அறிவித்தல்

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் உரிய அதிகாரிகளுக்கு...