புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் பதிவு செய்யப்பட்ட அனைத்து மத ஸ்தலங்களுக்கும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்குவதற்கு தேவையான ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (28) நடைபெற்ற அகில இலங்கை சில் மாதா தேசிய சபைக் கூட்டத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், அதுவரை மின்கட்டணத்தை செலுத்த முடியாமல் பாரிய பிரச்சினைகள் இருப்பின் தமக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.