தொழிற்சங்க செயற்பாட்டாளர் அல்லது எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும், மற்ற ஊழியர்களின் பணிக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது அத்தியாவசியத்தை மீறும் வகையில் செயல்படும் ஊழியர்களுக்கு எதிராக, பணிநீக்கம் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க தேவையான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு சிலோன் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் லிமிடெட் (CPSTL)ஆகியவற்றின் தலைவருக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்திலேயே அவர் மேற்கண்டவாறு பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
I have instructed Chairman CPC & CPSTL to take necessary disciplinary steps to consider termination of employment & any legal steps necessary against trade union activist or employees that are disrupting the distribution of fuel, disrupting the work of other employees or is…
— Kanchana Wijesekera (@kanchana_wij) March 28, 2023