follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுசுற்றுலா பயணிகளை ஏமாற்றினால் அபராதம் அதிகம்

சுற்றுலா பயணிகளை ஏமாற்றினால் அபராதம் அதிகம்

Published on

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளிடம் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தற்போது விதிக்கப்படும் 25,000 ரூபா அபராதத்தை 100,000 ரூபாவாக அதிகரிக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சிவில் பாதுகாப்புக் குழுக்களை ஈடுபடுத்துமாறும், அத்தகைய முறைகேடுகள் குறித்த முறைப்பாடுகளைப் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கான சாளரத்தை உருவாக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

லக்கேஜ் தூக்குபவர்கள், டாக்சி டிரைவர்கள் மற்றும் புரோக்கர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக அடிக்கடி எழுந்த முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 40,958 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்...

விசேட தேவையுடையோருக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் விசேட தேவையுடையோர் வாக்களிக்கும் போது வாக்குச் சீட்டில் அடையாளமிடுவதற்காக உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்ல...

21 மாணவர்கள் திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி

வலப்பனை - படகொல்ல புஸ்ஸதேவ பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்டதன் பின்னர் ஏற்பட்ட திடீர்...