தாம் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த அறிவித்தல் தொடர்பில் நிதி அமைச்சிற்கு பதில் கடிதம் அனுப்பவுள்ளதாக தெரிவித்த அவர் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை வன்மையாக நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.