follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுகொழும்பிற்கு பயணிக்கும் வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்

கொழும்பிற்கு பயணிக்கும் வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்

Published on

புதிய களனி பாலத்தில் இறுதிக்கட்ட கட்டுமான பணிகள் காரணமாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாற்று வீதிகளை பயன்படுத்தமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களனி பாலத்தில் கட்டுமான பணிகள் காரணமாக பேஸ்லைக் வீதி மற்றும் துறைமுக நுழைவு வீதி ஆகிய பகுதிகளில் காலை மற்றும் மாலை வேலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, பின்வரும் வீதிகளை பயன்படுத்தி, போக்குவரத்து நெரிசலை குறைத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் மற்றும் சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்டி வீதியினூடாக கொழும்புக்கு பிரவேசிக்கும் வாகனங்கள் பேஸ்லைன் வீதியில் பயணிக்காமல், நவலோக்க சுற்றிவட்டத்தின் ஊடாக தொட்டலங்க சந்தி, ப்ரின்ஸ் ஒஃப் வேல்ஸ் வீதி அல்லது ப்ளூமெண்டல் வீதியினூடாக கொழும்புக்கு பிரவேசிக்க முடியும்.

நீர்கொழும்பு வீதியினூடாக வருகைதரும் வாகனங்கள் கதிரான பாலம், அளுத்மாவத்தை வழியாக கொழும்புக்கு பிரவேசிக்க முடியும்.

பழைய அவிசாவளை வீதியினூடாக வருகைதரும் வாகனங்கள் ஸ்டேஸ் வீதி, கொஸ்கஸ் சந்தி, லேயார்ட்ஸ் ப்ரோட்வே (Lyards Broadway_) வீதியினூடாக ப்ரின்ஸ் ஒஃப் வேல்ஸ் வீதி (Prince of Wales Avenue) ஊடாக பிரவேசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு சகோதரர்கள் கொலை

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெஹெரகொடெல்ல பகுதியில் இன்று (15) காலை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் இரு...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 1,500 ரூபா இலஞ்சம் பெற்றமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அடிப்பல பிரதேசத்தைச் சேர்ந்த...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான...