பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாததால் இம்ரான்கானை கைது செய்ய பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிடியாணையை இரத்து செய்ய கோரி இம்ரான்கான் தரப்பில் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த லாகூர் மேன்முறையீட்டு நீதிமன்றம் இம்ரான்கானை கைது செய்ய தடை விதித்ததோடு, 5 வழக்குகளில் கடந்த 24ம் திகதி வரை பிணை வழங்கி உத்தரவிட்டது.
இந்தநிலையில் பிணையினை நீட்டிக்க கோரி இம்ரான்கான் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரது பிணையினை நாளை (திங்கட்கிழமை) வரை நீட்டித்து உத்தரவிட்டது.