உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு மற்றும் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணிகளில் ஈடுபட்ட அரச அச்சக ஊழியர்களின் கொடுப்பனவுக்கான நான்கு கோடி ரூபாவை திறைசேரி இதுவரை செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே திறைசேரியிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்களுக்காக அரசாங்க அச்சகம் இதுவரை 15 கோடி ரூபாவுக்கும் அதிகமான செலவிட்டுள்ளது.
இதேவேளை, நிதிப் பிரச்சினை காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதை அரசாங்க அச்சகம் முற்றாக நிறுத்தியுள்ளது. தற்போது வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு பணத்தை வழங்க முடியாது என திறைசேரி அண்மையில் அரசாங்க அச்சகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.