இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சின் செயலாளர் பங்கஜ் ஜெயின் உள்ளிட்ட குழுவினர் இன்று (24) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
இந்த குழுவில் ஐஓசி அல்லது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ்வும் இணையவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் உயர்மட்ட தலைவர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளனர்