சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி குறித்து ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் பேசியதையடுத்து ஆளும் கட்சியின் வாயிலை விட்டு வெளியேறி நேராக எதிர்க்கட்சிக்கு சென்றார்.
அப்போதும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித், தனது பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன், சில விஷயங்களை பேசிக் கொண்டிருந்தார்.
“ஆ.. எப்படி?” ஜனாதிபதி தனது வழக்கமான தொனியில் கேட்டார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
“நீங்கள் இந்த வழியே கூட வராதவராச்சே..” என்று எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கேட்க,
“நான் வருகிறேன், நீங்கள் என்னைத் தவிர்க்கிறீர்கள்” என்று ஜனாதிபதி மீண்டும் கூறினார்.
பின்னர், “எங்களுக்கு எப்போது விருந்து கொடுப்பீர்கள்” என ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மரிக்காரிடம் கேட்டுள்ளார்.
“என்ன சார் பார்ட்டி” என்று திகைத்து மரிக்கார் கேட்கிறார்.
“ஏன் முஜிபுர் ரஹ்மானை பாராளுமன்றத்தில் இருந்து நீக்கிய விருந்துதான்” ஜனாதிபதி கூறியதற்கு எதிர்க்கட்சி தலைவர் உட்பட அனைவரும் நக்கலாக நகைத்துள்ளனர்.
“நீங்களும் IMFன் திட்டத்தை ஆதரியுங்கள். இதன் மதிப்பு உங்களுக்குத் தெரியும் தானே..” எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சிரித்துக் கொண்டே இந்தக் கதையில் பங்கேற்கவில்லை.