ஐ.நா.வின் உயர் நீதிமன்றம், இந்தியப் பெருங்கடலின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறைந்த ஒரு பகுதியை சோமாலியாவின் கட்டுப்பாட்டில்
ஒப்படைத்தது. சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கிழக்கு ஆபிரிக்க கடற்கரையில் சர்ச்சைக்குரிய கடலின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே
கென்யா பெற்றது.
கென்யாவின் ஜனாதிபதி உஹூரு கென்யாட்டா இந்த தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘இந்த தீர்ப்பை தனது அரசாங்கம் முழுவதுமாக
நிராகரிக்கிறது மற்றும் இந்த தீர்ப்பை அங்கீகரிக்கவில்லை’ என்று கூறினார். கென்யா ‘பக்கச்சார்பான’ நீதிமன்றத்தின் அதிகாரத்தை அங்கீகரிக்க மறுப்பதால், அடுத்து என்ன நடக்கும் என்பதில்
உலகின் அனைத்து கண்களும் இருக்கப் போகிறது
இதேவேளை நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி கென்யா சர்வதேச சட்ட விதியை மதிக்க வேண்டும் சோமாலியா வலியுறுத்தியுள்ளது
100,000 சதுர கிலோமீட்டர் (38,000 சதுர மைல்) பாதை தொடர்பான சர்ச்சையைத் தீர்க்க பல வருட முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர்
சோமாலியா 2014 இல் கென்யாவை நீதிமன்றத்திற்கு இழுத்தது.