follow the truth

follow the truth

November, 18, 2024
Homeவணிகம்“Crafting Ceylon” ஏற்றுமதி சார்ந்த வடிவமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சி

“Crafting Ceylon” ஏற்றுமதி சார்ந்த வடிவமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சி

Published on

இலங்கை கைவினைஞர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Crafting Ceylon” ஏற்றுமதி சார்ந்த வடிவமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (23) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றது.

தொழில் அமைச்சு மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை மேம்பாட்டு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய அருங்கலைகள் பேரவை இந்தத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பரந்து கிடக்கும் கைவினைக் கலைஞர்களை மாவட்ட மட்டத்தில் ஒன்று சேர்த்து, ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்பட வேண்டிய கைவினைப் பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறையும் இதற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்கு, 25 மாவட்டங்களைச் சேர்ந்த கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட 2214 கலைப்படைப்புகளில், 100 சிறந்த கைவினைஞர்களின் 546 கலைப்பொருட்கள் தேசிய நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கைவினைஞர்களின் கலைப்படைப்புகளைப் பாராட்டி, அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த ஏற்றுமதி சார்ந்த வடிவமைப்பு மேம்பாட்டு நிகழ்ச்சிக்கு அழகு சேர்க்கும் வகையில், கிராமிய கலைகள் நிலையத்தின் மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட கலாசார நிகழ்ச்சிகள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்திருந்த அதிதிகளின் விசேட கவனத்தை ஈர்த்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காய் மற்றும் இளநீர் விலை

தேங்காய் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அதன்படி, சில பகுதிகளில் தேங்காய் 180 முதல் 200 ரூபா...

Hot ‘N’ Spicy ஆக மாறும் சனா

இலங்கை , கொழும்பு 2024 ஒக்டோபர் 05 : வளர்ந்து வரும் பதின்ம வயது கலைஞரான சனாவை தனது...

இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஜப்பான் தயார்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியான ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பான்...