இரண்டு வாரங்களாக பாராளுமன்றத்திற்கு முட்டை வழங்கப்படவில்லை என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முட்டைகள் வழங்கப்படும் 10 கடைகளில் எட்டு கடைகளில் முட்டை விற்பனைக்கு இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இன்று (23) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி முட்டை தற்போது கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவித்தார்.
தர சோதனைக்கு பின் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் வெளியிடப்படும் என்றார்.