ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த பாராட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பணியை ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்குமாறு பசில் ராஜபக்சவே பரிந்துரை செய்ததாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. வியத் மகவில் ஜனாதிபதியின் கால்களை இழுக்கும் ஒரு சிலரை நாங்கள் கொண்டிருந்தோம். உண்மையில் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடியவர் என்ற பரிந்துரையை பசில் ராஜபக்சவே முன்வைத்தார்..” எனவும் தெரிவித்திருந்தார்.