சர்வதேச நாணய நிதியம் ஒரு சிறிய ஊசி போட்டதற்காக இவ்வாறு குசியில் கொந்தளிக்க முயற்சிக்க வேண்டாம், இந்த நாட்டில் பொய்யாக ஊதிப் பெருக்கப்படும் சில முட்டாளகள் இருப்பதை சர்வதேச நாணய நிதியம் கண்டறிந்தால், எதிர்காலத்தில் ஐந்து சதமும் வழங்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பாராளுமன்றத்தில் இன்று (22) தெரிவித்தார்.
இவற்றைப் பார்க்கும் போது கபுட்டா காக் காக் கா என்று சொல்ல வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் லங்கா வைத்தியசாலை தொடர்பில் தாம் பிரச்சினையொன்றை முன்வைத்த போது அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தொடர்ந்து குறுக்கிட்டுக் கேள்வி கேட்டபோதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச :
ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் லங்கா ஹோஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தில் உள்ள அரசாங்க பங்குகளை விற்பதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானம் எடுத்துள்ளது. ஏன் இந்த இலாபகரமான பங்குகளை விற்கிறீர்கள்?
(ஆளுங்கட்சியின் தொடர் தலையீடு)
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன:
நாடாளுமன்ற உறுப்பினர்களே அமைதியாக இருங்கள். சபையை நகர்த்த முடியாது.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச :
கபுட்டா காக் காக் கா என்றா கூற வேண்டும்?
ஜனாதிபதி விரும்பினால் பதில் சொல்லுங்கள். நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்கள் விற்கப்படும் என்று முதலில் கூறப்பட்டது. இலாபகரமானவற்றை வெளிநாட்டினர் வாங்கினால் டாலர் அழுத்தம் குறையுமா, அதிகரிக்குமா? டாலரில் ரூபாயை எடுக்கிறார்கள். சர்வதேச நாணய நிதியத்தினை கேட்டு, இதற்குப் பதில் சொல்லுங்கள்.