மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை (22) மீண்டும் கூடவுள்ளது.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பு மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் சமர்ப்பித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் இந்த விசாரணை நடத்தப்பட்ட போதிலும் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் இதில் கலந்து கொள்ளவில்லை.
இது தொடர்பான விசாரணை நாளை காலை 10 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் வைத்தியர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.