Homeஉள்ளூர்“கணேமுல்ல சஞ்சீவ“ சுட்டுக்கொலை ; செவ்வந்தியின் தாயாருக்கும் சகோதரனுக்கும் விளக்கமறியல்!

“கணேமுல்ல சஞ்சீவ“ சுட்டுக்கொலை ; செவ்வந்தியின் தாயாருக்கும் சகோதரனுக்கும் விளக்கமறியல்!

கொழும்பு – புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த புதன்கிழமை (19) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ“ என்பவரை சுட்டுக் கொலை செய்வதற்கு துப்பாக்கிதாரிக்கு உதவி செய்ததாக கூறப்படும் இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணின் தாய் மற்றும் சகோதரன் ஆகியோரை எதிர்வரும் மார்ச் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரன் ஆகியோர் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரவினரால் இன்று செவ்வாய்க்கிழமை (25) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular